search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் தலித், ஓபிசி-யின் இடஒதுக்கீடுகளை பறித்து ஜிஹாதி வாக்கு வங்கிக்கு அளிக்க விரும்புகிறது: மோடி கடும் தாக்கு

    • ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா அரசை வெளியேற்ற இது ஒன்றுதான் வழி- மரியம் ஆலம்.
    • மோடிக்கு எதிரான வாக்கு ஜிஹாத் அழைப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் பர்தாமன்-துர்காபூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் இங்கே அனுபவிப்பதற்கான வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கான என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன். மேற்கு வங்காளத்தில் இந்துக்களை திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாம் தர குடிமக்களாக்கியுள்ளது. காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்றி தலித் மற்றும் ஓபிசி இடஒதுக்கீடுகளை பறித்து ஜிஹாதி வாக்கு வங்கிக்கு வழங்க விரும்புகிறது.

    மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக அளிக்க முடியுமா? என காங்கிரஸ்க்கு சவால் விட்டிருந்தேன். ஆனால், அவர்கள் அமைதியாக உள்ளனர். காங்கிரசின் இளவரசர் பயந்து ரேபரேலியில் போட்டியிடுகிறார். மேற்கு வங்காள அரசுக்கு மனிதாபிமானத்தை விட சமரச அரசியல்தான் மிகவும் முக்கியமானது. இதனால் சந்தேஷ்காளி குற்றவாளி ஷேக் ஷாஜகானை பாதுகாத்து வருகிறது. மோடிக்கு எதிரான வாக்கு ஜிஹாத் அழைப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி 2024 தேர்தலில் இதுவரை எந்த காலத்திலும் மிகவும் குறைவான எண்ணிக்கை என்ற வகையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும்.

    காங்கிரஸ் தலைவர் மக்களவை உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு மாநிலங்களை மூலும் பாராளுமன்றத்திற்கு நுழைந்துள்ளார். இதன்மூலம் அக்கட்சியின் உடனடித் தோல்வியை முன்னதாகவே கண்டேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமரச அரசியலுக்காக சிஏஏ-வை எதிர்க்கிறது. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் சமரச அரசியலை மட்டுமே நம்புகின்றனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

    முன்னதாக உத்தர பிரதேச மாநிலம் பருக்காபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாவல் கிஷோர் ஷக்யாவை ஆதரித்து சமாஜ்வாடி கட்சி தலைவரும், சல்மான் குர்ஷித்தின் உறவினருமான (Niece- சகோதரர் மகள், அல்லது சகோதரி மகள்) மரியா ஆலம் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மரியா ஆலம் கூறியதாவது:-

    புத்திசாலிதனத்தோடு, உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக ஒன்றிணைந்து ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா அரசை வெளியேற்ற இது ஒன்றுதான் வழி. அரசியலமைப்பு, ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன். மனிதாபிமானம் (மனிதநேயம்) அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

    நாடு, அதன் அழகு மற்றும் கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க விரும்பினால், எந்தவிதமான உந்துதலையும் பெறாமல் புத்திசாலித்தனமாக வாக்களிக்களியுங்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்கும் முஸ்லிம்களை புறக்கணியுங்கள்.

    இவ்வாறு மரியம் ஆலம் பேசியிருந்தார்.

    இந்த வீடியோ வைரலாக பரவி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீதும், அவர் பேசியபோது அங்கிருந்து சல்மான் குர்ஷித் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது.

    இது தொடர்பாக முன்னதாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி முஸ்லிம்கள் ஜிஹாத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. இது மிகவும் கல்வியறிவு பெற்ற குடும்பத்தில் இருந்து வந்துள்ளது. மதராஸில் இருந்து வந்த சிறுவனிடம் இருந்து வரவில்லை. அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கூறிக் கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா கூட்டணி அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை இழிவுப்படுத்தியுள்ளது.

    ஒருபுறம் SC, ST, OBC மற்றும் பொது பிரிவினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய கூட்டணி மறுபுறம் வாக்கு ஜிகாத் என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறது. அவர்களின் எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் ஜிஹாத் வாக்கு வங்கி எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×