search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராக மாறிவரும் ராஜபாளையம் ஜவகர் மைதான மேடை
    X

    ராஜபாளையத்தில் இரவு நேரங்களில் மதுபான கூடமாக மாறிவரும் ஜவகர் மைதான மேடை யையும், அங்கு பரவிக்கிடக்கும் மது பாட்டில்களையும் படத்தில் காணலாம்.

    'பாராக' மாறிவரும் ராஜபாளையம் ஜவகர் மைதான மேடை

    • பாராமுகமாக இருப்பதால் குடிமகன்களின் ‘பாராக’ மாறிவரும் ராஜபாளையம் ஜவகர் மைதான மேடை.
    • இரவில் வெளியே வர குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.

    ராஜபாளையம்

    'காட்டன் சிட்டி' என்று பெருமையுடன் அழைக்கப்ப டும் விருதுநகர் மாவட்டத் தின் முக்கிய தொழில்நகர மாக திகழும் ராஜபாளையம் பல்வேறு வரலாற்று சான்று களையும் தாங்கியுள்ளது.

    அதிலும் குறிப்பாக தேசத் தந்தை மகாத்மா காந்தியடி கள், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ஜவஹர்லால் நேரு, பசும்பான் முத்துராமலிங்கத் தேவர் போன்ற தேசத்தலை வர்களும் அண்ணா, பெரி யார், காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர் களும் பொதுக்கூட்டத்தில் பேசி வரலாறு கண்ட ஜவ கர் மைதானம் ராஜபாளை யம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

    இதனாலேயே ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிக ளுமே பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்ந்தெடுப்பது ராஜபாளையம் ஜவகர் மைதானத்தை மட்டுமே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் பொதுக்கூட்ட மேடை ஜவஹர் மைதானத் தின் கிழக்குப் பகுதியில் மேற்கு பார்த்து அமைக்கப் பட்டது.

    இது சற்று உயரமாக இருப்பதால் மேடையில் இருப்பவர்கள் பொதுமக்கள் பார்வைக்கு சரியாக தெரிவ தில்லை என்று கருதிஅதன் எதிர்புறம் மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்து தற்காலிக மேடை அமைத்து பொதுக் கூட்டம் நடத்துவதை அனைத்து கட்சிகளும் வழக் கமாகக் கொண்டுள் ளது. இதனால் உபயோகப்படுத் தாமல் இருக்கும் கிழக்கு புறம் அமைந்துள்ள மேடை யினை குடிமகன்கள் பாராக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

    காவல் துறை அதிகாரி களும் பாராமுகமாக இருப்ப தால் தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் குடிமகன்கள் மேடை முழுவதும் ஆக்கிர மித்து விடிய, விடிய மது அருந்துகிறார்கள். வார சம்பளம் பெறும் தொழிலா ளிகள் சனிக்கிழமை இரவு வாங்கும் சம்பளத்தை இந்த மேடையில் அமர்ந்து மது அருந்தி சம்பள பணத்தை கரைத்து விட்டு வீட்டில் பெயில் மார்க் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள னர்.

    இவர்களை மகிழ்ச்சியூட் டூம் விதமாக திருநங்கைகள் சிலர் அழகு மங்கைகளை போல அலங்காரம் செய்து கொண்டு மேடையில் இருப் பவர்களுக்கு ஜாடை காட்ட தொடங்கி விடுகிறார்கள். இதனால் விடிய, விடிய இவர்கள் அட்டகாசம் தாங் காமல் அருகில் உள்ள குடி யிருப்புவாசிகள் இரவு ஆகி விட்டால் வெளியே வரு வதே இல்லை.

    பாதுகாப்பில்லாத சூழ் நிலை ஏற்படுவதால் இது குறித்து காவல்துறை உடன டியாக நடவடிக்கை எடுத்து வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்கூட்ட மேடை மது கூட மேடையாக மாறியிருப் பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொது மக்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு இரவும் மதுப் பிரியர்கள் அருந்தும் மது பாட்டில்களை அருகில் வீசி விட்டு செல்வதும் வாடிக் கையாகி விட்டது.

    ஞாயிற்றுக்கிழமை வந்து–விட்டால் சண்டேனா இரண்டுடங்கிற மாதிரி அந்த பகுதியில் சேகரிக்கப்ப டும் மது பாட்டில்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங் குகிறது. இது போதா தென்று பற்றாக்குறைக்கு குடிமகன்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு அடிதடி என்றும், சில சமயம் பாட் டில் வீச்சும் நடக்கிறது. அந்த மேடையை டெண்டர் விட்டு பார் வைக்க முறைப்படி அனுமதி கொடுத்து விட லாம் என்று சமூக ஆர்வலர் கள் ஆதங்கத்துடன் கூறி வருகிறார்கள்.

    குறைகளை நாங்கள் தெரிவித்து விட்டோம், நிறை களை காண சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சாட் டையை கையில் எடுப்பார் களா? என்பதை பொருத்தி ருந்துதான் பார்க்க வேண் டும்.

    Next Story
    ×