search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டாள்
    X
    ஆண்டாள்

    மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 12

    கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 
    நினைத்து முலை வழியே நின்று பால் சோர 
    நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 
    பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி 
    சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் 
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
    அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்

    விளக்கம்: எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்புகிறார்களாம் இந்தப் பாடலில். பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. 

    இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் உறங்கிக்கொ ண்டிருக்கின்றாய். 
    Next Story
    ×