search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பாவை
    X
    திருப்பாவை

    மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 10

    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.
    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
    மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
    நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
    போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுடொருநாள்
    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
    தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
    ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
    தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
     
    பொருள்:
     
    முற்பிறவியில் எப்பெருமான் நாரயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணெ! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமனம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.
    Next Story
    ×