ஸ்மார்ட்போன் விற்பனையில் மாஸ் காட்டிய ஆப்பிள், சாம்சங் - முதலிடம் யாருக்கு தெரியுமா?
- 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் ஆகும்.
- மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.
உலகளவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்டியலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. 2024 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் வினியோகம் தொடர்பாக கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி இந்த காலாண்டு வாக்கில் விற்பனைான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி இடம்பெற்றிருந்தது. மேலும், பயனர்கள் பிரீமியம் சாதனங்களை அதிகளவில் வாங்க துவங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்களில் 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 50 ஆயிரத்து 90) என துவங்கின.
2024 ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடலாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இடம்பெற்று இருக்கிறது. டாப் 10 விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. இதில் முதல் மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.
முதல் காலாண்டின் டாப் 10 பட்டியலில் இரண்டு இடங்களை சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் பெற்றுள்ளது. இதில் கேலக்ஸி S24 அல்ட்ரா ஐந்தாவது இடமும், கேலக்ஸி S24 பேஸ் வேரியண்ட் ஒன்பதாவது இடமும் பிடித்துள்ளது.
அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்
ஐபோன் 15
ஐபோன் 15 ப்ரோ
ஐபோன் 14
கேலக்ஸி S24 அல்ட்ரா
கேலக்ஸி A15 5ஜி
கேலக்ஸி A54
ஐபோன் 15 பிளஸ்
கேலக்ஸி S24
கேலக்ஸி A34