உலகம்

மாலத்தீவில் இன்று பாராளுமன்ற தேர்தல்

Published On 2024-04-21 05:33 GMT   |   Update On 2024-04-21 05:33 GMT
  • தேர்தலில் அதிபர் முகமது முய்சுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
  • அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 368 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

இந்த தேர்தலில் அதிபர் முகமது முய்சுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த பாராளுமன்ற தேர்தல், அதிபர் முகமது முய்சுவின் செல்வாக்கை சோதிக்கும் களமாக இருக்கும்.

Tags:    

Similar News