உலகம்

பிரேசிலில் தொடர் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 66 பேர் பலி- மீட்பு பணி தீவிரம்

Published On 2024-05-05 16:39 GMT   |   Update On 2024-05-05 16:39 GMT
  • வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
  • சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.

இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு ஏற்கனவே 37 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 101 பேர் காணவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும், உள்ளூர் நகராட்சியின் அறிக்கையின்படி, 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தின் வழியாக ஓடும் குய்பா நதி, 1941 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பேரழிவின்போது வரலாற்று உச்சமாக 4.76 மீட்டர் இருந்தது. இது, 5.3 மீட்டர் என்ற புதிய உச்ச அளவை எட்டியது.

Tags:    

Similar News