இந்தியா

இந்தியா கூட்டணி தேச விரோத சக்திகளை ஆதரிக்கிறது, கடவுள் ராமருக்கு எதிரானது: ஜேபி நட்டா

Published On 2024-05-03 10:20 GMT   |   Update On 2024-05-03 10:20 GMT
  • நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது,
  • அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, ராகுல் காந்தி அங்கே சென்றார்.

குஜராத் மாநிலம் தஹோத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கடவுள் ராமர் கற்பனையே. வரலாற்று ரீதியாக அல்லது அறிவியல்பூர்வமாக அவர் இருந்ததற்கான எந்த சான்றுகள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.

அவர்கள் தடைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி கடவுள் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தினார். 10 நாட்கள் சடங்குகளுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22-ந்தேதி நடைபெற்றது.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, அடுத்த நாளே அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி அங்கே சென்றார்.

அப்சல் குருவுக்கு ஆதரவான துண்டாக்க விரும்பும் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்தார். அவருடைய கட்சி அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு (கணையா குமார் வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்) மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் தேச விரோத சக்திகளுடன் இல்லையா? அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

அம்பேத்கர் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது, சமூக நீதிக்காக இடஒதுக்கீடு எனக் கூறியதை பிரதமர் மோடி மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இது நமது அரசியலமைப்ப சூறையாடுவதற்கு சமம். நாட்டை பலவீனப்படுத்தும் மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது.

இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News