உடற்பயிற்சி

பாதாமை ஏன் ஊறவைத்து சாப்பிட வேண்டும்?

Published On 2023-12-24 08:23 GMT   |   Update On 2023-12-24 08:23 GMT
  • அப்படியே சாப்பிடுவதை விட நீரில் ஊறவைத்து சாப்பிடுவது சிறந்தது.
  • செரிமானம் துரிதமாக நடைபெற உதவும்.

பாதாமை அப்படியே சாப்பிடுவதை விட நீரில் ஊறவைத்து சாப்பிடுவது சிறந்தது என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கு என்ன காரணம் தெரியுமா?

ஊறவைத்த பாதாம், என்சைம்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். செரிமானம் துரிதமாக நடைபெற உதவும். அதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் செய்யும். பாதாமை ஊறவைப்பது ஊட்டச்சத்துக்களுக்கு உயிர்ப்புத்தன்மை கிடைக்க செய்யும். அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உடல் துரிதமாக உறிஞ்சுவதை உறுதி செய்யும்.

ஊறவைத்த பாதாமை காலை வேளையில் உட்கொள்வது உடலுக்கு தேவையான ஆற்றலை கிடைக்க செய்யும். அதில் இருக்கும் அதிக புரதம் உடலுக்கு வலுசேர்க்கும். பாதாமை ஊறவைக்கும் போது உடலுக்கு நன்மை பயக்கும் என்சைம்களை வெளியிடும். அதை உட்கொள்வது உடல் நலனுக்கு நன்மை சேர்க்கும்.

ஊறவைத்த பாதாமில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஊறவைத்த பாதாமை உட்கொள்வது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவும். அதனால் நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாள் முழுவதும் உடலில் ஆற்றலை தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் ஊறவைத்த பாதாம் சிறந்த தேர்வாக அமையும்.

ஊறவைத்த பாதாமில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். அவை, அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நினைவகத்திறனையும் மேம்படுத்தும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

ஊறவைத்த பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, ஆரோக்கியமான சருமத்திற்கு வித்திடும். சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படும். இளமை தோற்றத்தை தக்கவைக்கவும் துணைபுரியும்.

Tags:    

Similar News