கிரிக்கெட்

'இன்னைக்கு ஜெயிக்கிறோம்'- RCB ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் சிவராஜ் குமார்

Published On 2024-05-18 14:15 GMT   |   Update On 2024-05-18 14:15 GMT
  • டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
  • போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

இந்நிலையில், பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிவராஜ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இன்னைக்கு ஜெயிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News