கிரிக்கெட்

இளம் விக்கெட் கீப்பர் டோனியின் ஹாட்ரிக் சிக்ஸ் மிகப்பெரிய அளவில் உதவியது: ருதுராஜ் கெய்க்வாட்

Published On 2024-04-15 03:18 GMT   |   Update On 2024-04-15 03:18 GMT
  • எங்களுக்கு 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது.
  • நாங்கள் பேட்டிங் செய்தபோது மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மகிழ்ச்சியில் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. அது வித்தியாசம் என்பதை நிரூபித்தது. இது போன்ற மைதானத்தில் எங்களுக்கு 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்தபோது மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்த போதிலும், நாங்கள் எங்கள் பந்து வீச்சின் திட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்து என நினைக்கிறேன். நாங்கள் பவர்பிளேயில் 60 ரன்கள் எடுத்திருக்கனும். எங்களுடைய மலிங்காவின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. தேஷ்பாண்டே, ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

ரகானேவுக்கு சிறிய அளவில் காயம் இருந்ததால் தொடங்க வீரராக களம் இறக்கினால் சிறப்பானதாக இருக்கும் என நினைத்தோம். எந்த இடத்தில் களம் இறங்கினாலும் எனக்கு சரியானதுதான். அது ஒரு கேப்டனாக கூடுதலாக பொறுப்பு.

இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டுபே அரைசதம் அடித்தனர். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார். பதிரான நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Tags:    

Similar News