search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிஷா சிங் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவி செயலாளராக பதவியேற்றார்
    X

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிஷா சிங் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவி செயலாளராக பதவியேற்றார்

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான உதவி செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மனிஷா சிங் பதவியேற்றுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க வெளியுறவுத்துறையின் பொருளாதாரம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு உதவி செயலாளர் வசம் உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிக்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனை வழங்குவதும், வெளிநாடுகளுடனான பொருளாதார கொள்கைகளை தீர்மானிப்பதும் அவரது முக்கிய வேலைகளாகும். இந்த பதவியில் சார்லஸ் ரிக்வின் இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், ராஜினாமா செய்தார். இதனால் அந்த பதவி காலியாக இருந்தது.

    காலியாக உள்ள வெளியுறவுத்துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான உதவி செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மனிஷா சிங் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதி செய்தது. மனிஷா இப்பதவியை ஏற்கும் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மனிஷா சிங் நேற்று அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் முன்னிலையில் பதவியேற்றார். அப்போது பேசிய மனிஷா அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துவேன் என கூறினார்.
    Next Story
    ×