search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் பீஜிங்கின் புதிய விமான நிலையம்
    X

    பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் பீஜிங்கின் புதிய விமான நிலையம்

    சீனாவின் பீஜிங் நகரில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான புதிய விமான நிலையத்தின் படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
    பீஜிங்:

    சீன அரசு பீஜிங் நகரில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விமான நிலையத்தின் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து 2019-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் எனக்கூறப்படுகிறது.

    இந்நிலையில், விமான நிலையத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. படங்களில் வருவது போல் விண்வெளித்தளம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அனைவரும் வியந்தனர். இதன் கட்டமைப்பு மிகவும் அற்புதமாக இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

    இந்த பிரம்மாண்டமான டெர்மினல் 1 விமான நிலையம், 313,000 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் ஒரு ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகள் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் திறக்கப்பட்டால் உலகின் இரண்டாது பெரிய பரப்பளவு கொண்ட விமான நிலையமாக திகழும் எனக் கூறப்படுகிறது.
    Next Story
    ×