search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து
    X

    ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து

    ஜப்பான் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷின்சோ அபேவிற்கு மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜப்பானில் நடைபெற்ற பாராளூமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

    பிரதமர் ஷின்சோ அபே கடந்த மாதம் 28-ம் தேதி பாராளுமன்றத்தை (பிரதிநிதிகள் சபை) கலைத்து உத்தரவிட்டார். இதனால் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 465 இடங்களில் சுமார் 1,200 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 312 இடங்களில் ஷின்சோ அபே கட்சி வெற்றி பெற்றது. மூன்றில் இரண்டு பங்கு இடம் கிடைத்துள்ளது என்பதால் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி  ஆட்சியை அமைக்கிறது.

    ஜப்பான் பிரதமராக சின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி, 'எனது இனிய நண்பர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது' என டுவிட் செய்துள்ளார்.
    Next Story
    ×