search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி வாழ்த்து"

    இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். #AsianGames2018 #MedalWinners #Modi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவின் ஜெகார்த்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றன. இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது.

    இதில் தடகளம் (7 தங்கம் உள்பட 19 பதக்கம்), துப்பாக்கி சுடுதல் (9 பதக்கம்), ஸ்குவாஷ் (5 பதக்கம்) ஆகிய போட்டிகளில் ஓரளவு ஆதிக்கம் செலுத்தியது. இது இந்தியாவுக்கு புதிய வரலாற்று சாதனையாக அமைந்தது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    ஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன் மற்றும் தடகளத்தில் பதக்கம் வென்ற டூடி சந்த், ஹீமா தாஸ் உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #AsianGames2018 #MedalWinners #Modi
    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் பெற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். #AsianGames2018 #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா நேற்று நிறைவடைந்தது.

    இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் பெற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இந்திய வீர்ர்  வீராங்கனைகளுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். 2018-ம் ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா புதிய வரலாறை உருவாக்கியுள்ள்து. இதில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

    போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பெற்றோர்கள், உறவினர் மற்று நண்பர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாம்பியன்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.  #AsianGames2018 #PMModi
    ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை குதித்து நீளம் தாண்டுதல்) இந்தியாவின் அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், இந்தோனேசியாவின் ஆசிய விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் சமயோசிதம் மற்றும் கடும் உழைப்பால் அர்பிந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
    ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டெறிதலில் தங்க பதக்கம் வென்ற தஜிந்தர் பால் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames #TejinderpalSinghToor #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற குண்டு எறிதலில் 20.75 மீட்டர் தூரம் குண்டு வீசி புதிய சாதனை படைத்து தங்க பதக்கம் வென்றார் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டெறிதலில் தங்க பதக்கம் வென்ற தஜிந்தர் பால் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க தங்கம் வென்றுள்ளீர்கள். ஆசிய விளையாட்டு போட்டியில் நீங்கள் நிகழ்த்திய சாதனையால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார். #AsianGames #TejinderpalSinghToor #PMModi
    இம்ரான்கானின் வெற்றியை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்திய பிரதமர் மோடி அவரது தேர்தல் வெற்றியை வரவேற்று வாழ்த்து தெரிவித்து இருப்பதை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது. #ImranKhan #Modi #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தெக்ரீக்-இர்-இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வருகிற 11-ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார்.

    இதைதொடர்ந்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை அண்டை நாடான இந்தியா விரும்புவதாகவும், இரு நாடுகளும் புதிய உறவை தொடங்க விழைவதாகவும் கூறினார்.

    அதற்கு பதில் அளித்த இம்ரான்கான், “இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை போர்மூலம் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகவும்” தெரிவித்தார். இத்தகவல் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    இம்ரான்கானின் வெற்றியை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி இம்ரான்கானின் தேர்தல் வெற்றியை வரவேற்று வாழ்த்து தெரிவித்து இருப்பதை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது.

    இந்தியாவின் அறிக்கை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக உள்ளது. இத்தகைய போக்கு மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அதிகாரிகள் தரப்பு கருதுகிறது. #ImranKhan #Modi #Pakistan
    துருக்கியில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் தீபா கர்மாகர் தங்க வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #DipaKarmakar #Gymnastics #PMModi
    புதுடெல்லி :

    துருக்கி நாட்டில் உள்ள மெர்சின் நகரில் ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபா கர்மாகர் 14.150 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். தங்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், உலக கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்ற தீபா கர்மாகரால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்த வெற்றி அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டுள்ளார்.



    தீபா கர்மார்கர் ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பைனலில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டு நான்காவது இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #DipaKarmakar #Gymnastics #PMModi
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #HappyBirthdayRahulGandhi #HappyBirthdayRG
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது ஆகும். இதையொட்டி நாடு முழுவதிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணம் என களைகட்டியுள்ளது.



    இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு கட்சி வேறுபாடு இன்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர். #HappyBirthdayRahulGandhi #HappyBirthdayRG #RahulBirthday

    கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல் மந்திரியாக இன்று பொறுப்பேற்று கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #kumaraswamy #Modicongratulates
    புதுடெல்லி:

    கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று (புதன்கிழமை) பதவி ஏற்றார். பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4:30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. 

    குமாரசாமியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பதவி ஏற்றவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

    இன்றைய பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சட்டசபையில் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன்பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரியாக இன்று பொறுப்பேற்று கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அவர்களின் பதவிக்காலம் சிறப்பாக அமைய நல்லாசிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #kumaraswamy #Modicongratulates 
    ×