search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனத் தூதர் உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தல்
    X

    சீனத் தூதர் உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தல்

    பாகிஸ்தான் நாட்டுக்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள யாவ் ஜிங்-கை கொன்று விடுவதாக தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டலை தொடர்ந்து அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    சீனாவில் பாகிஸ்தான் தலைமை தூதராக பணியாற்றிவந்த சுன் வீடாங் என்பவரது பதவிக்காலம் முடிந்ததால் புதிய தூதராக யாவ் ஜிங் சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டார்.

    இவரை கொல்லப் போவதாக கிழக்கு துருக்மேனிஸ்தான் இஸ்லாமிய இயக்க தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை சீன அரசு அமைத்துவரும் நிலையில் இந்தப் பணியில் ஈடுபட்டு வருபவர்களின் உயிருக்கும் இந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் நேரலாம் என சீனா கருதுகின்றது.

    இந்நிலையில், பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள யாவ் ஜிங்-கை கொன்று விடுவதாக மிரட்டியுள்ள தீவிரவாதி அப்துல் வாலி என்பவனை கைது செய்து உடனடியாக தங்களிடம் ஒப்படைக்குமாறும், புதிய தூதர் மற்றும் அங்கு பணியாற்றும் சீனர்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் பாகிஸ்தானில் உள்ள சீன தலைமை தூதரகம் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

    சீனா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள க்சின்ஜியான்ங் மாகாணத்தில் கிழக்கு துருக்மேனிஸ்தான் இஸ்லாமிய இயக்க தீவிரவாதிகள் பரவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×