search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு
    X

    வேதியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

    உலகின் உயர்ந்த விருதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் வேதியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    ஸ்டாக்ஹோம்: 

    இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுவருகிறது. பரிசுகளை நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்து வருகிறார். நேற்று முன்தினம் மருத்துவத்துக்கான நோபல் பரிசும், நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது.

    இன்று 2017ம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசானது 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக ஜாக்கெஸ் டெபோசே, ரிச்சர்ட் ஹேண்டர்சன், ஜோசிம் ஃபிராங்க் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ரிச்சர்ட் ஹேண்டர்சன் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். ஜோசிம் ஃபிராங்க் அமெரிக்காவை சேர்ந்தவர். ஜாக்கெஸ் டெபோசே சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்.
    Next Story
    ×