search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவில் இன்று நிலநடுக்கம்
    X

    சீனாவில் இன்று நிலநடுக்கம்

    சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள குவான்யுவாங் நகரின் மேற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
    பீஜிங்:

    சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள குவான்யுவாங் நகரின் மேற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

    குவான்யுவாங் நகரில் இருந்து சுமார் 78 கிலோமீட்டர் மேற்கில் பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும், பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்து தெருக்களில் தஞ்சம் அடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
    Next Story
    ×