search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் வழியாக 2-வது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசிய வடகொரியா
    X

    ஜப்பான் வழியாக 2-வது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசிய வடகொரியா

    வடகொரியா இரண்டாவது முறையாக ஜப்பான் வழியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி உள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வாஷிங்டன்:

    வடகொரியா சமீபத்தில் 6-வதுதடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

    அதன் பிறகாவது வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணுஆயுத சோதனையை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகொரியா தன்நிலையில் இருந்து மாறவில்லை. மாறாக இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது.

    இது இடைப்பட்ட தூரம் சென்று தாக்கக் கூடிய திறம் படைத்தது. இந்த தகவலை அமெரிக்காவுக்கான பசிபிக் கமாண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த ஏவுகணை ஜப்பான் மீது பறந்து சென்று பசிபிக் கடலில் விழுந்தது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. ஏவுகணை வடகொரியாவின் சுனான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செலுத்தப்பட்டது என பசிபிக் கமாண்ட் நிறுவன அதிகாரி தேவ் பென்காம் தெரிவித்தார்.

    இந்த ஏவுகணை சோதனை தங்களுக்கு விடுத்த அச்சுறுத்தல் அல்ல என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதே கருத்தை வடஅமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கமாண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதே நேரத்தில் தங்களது நட்பு நாடுகளான தென் கொரியா, ஜப்பான் மற்றும் அயர்ன்கிலாட் பகுதிகளுக்கு தான் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அதை எதிர் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளது.
    Next Story
    ×