search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ராணுவ விமானம் பயிற்சியின் போது விபத்தில் சிக்கியது
    X

    பாகிஸ்தான் ராணுவ விமானம் பயிற்சியின் போது விபத்தில் சிக்கியது

    பாகிஸ்தான் ராணுவ விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. ஆனால் உயிர் சேதமோ, பொருள் சேதமா ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் விமான படையை சேர்ந்த வீரர்கள் அவர்கள் நாட்டிற்குட்பட்ட பஞ்சாப் மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரர் ஒருவர் ஓட்டிச் சென்ற ஜெட் விமானம் லாகூரிலிருந்து 200 கி.மீ தொலைவில் வைத்து திடீரென்று விபத்துக்குள்ளானது.

    விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார். இது இந்த வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது விமான விபத்தாகும்.

    விமான விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

    விபத்துக்குள்ளான விமானங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற 50-க்கும் மேற்பட்ட சீன தயாரிப்பு விமானங்கள் பாகிஸ்தான் கடற்படையில் உள்ளன.


    Next Story
    ×