search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை மாநகராட்சி கமி‌ஷனர் வீட்டில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியது
    X

    தஞ்சை மாநகராட்சி கமி‌ஷனர் வீட்டில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியது

    லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட தஞ்சை மாநகராட்சி கமி‌ஷனர் வீட்டில் நடத்திய சோதனையின்போது பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளது.மாநகராட்சி கமி‌ஷனர் வீட்டில் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியது
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி சம்பந்தம் (60). இவரிடம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி கமி‌ஷனர் வரதராஜன் (57). புரோக்கராக செயல்பட்ட அ.தி.மு.க நகர எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் பொன்.நாகராஜ்(54) ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கமி‌ஷனர் வரதராஜன் தங்கியிருந்த அரசு இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    விசாரணையில் சேலத்தை சேர்ந்த கமி‌ஷனர் வரதராஜன் கடந்த ஓராண்டுக்கு முன் சேலம் அய்யந்திருமாளிகை சிண்டி கேட் பேங்கள் காலனியில் பல கோடி மதிப்பில் பங்களா ஒன்றை கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து சேலம் டி.எஸ்.பி. சந்திரமவுலி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வரதராஜனின் பங்களாவுக்கு சோதனையிடச் சென்றனர். அங்கு அவரது மனைவி சசிகலா 2 மகன்கள் இருந்தனர்.

    இந்த சோதனையில் பல்வேறு சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சோதனையில் 160 பவுன் நகை ரூ.2 லட்சம் ரொக்கம் கைப்பற்றபட்டுள்ளது. மேலும் வரதராஜன், சசிகலா பெயரில் வங்கி நிரந்தர டெபாசிட் மட்டுமே ரூ.1 கோடிக்கு செய்யப்பட்ட ஆவணங்கள், பல கோடி மதிப்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாங்கி குவிக்கப்பட்ட வீட்டு மனைகள், விவசாய நிலங்களின் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், 10 வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தகங்கள் ரூ.1 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்ட எல்.ஐ.சி. மற்றும் பல்வேறு பத்திரங்கள் சிக்கின. இவற்றின் மொத்த மதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×