search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுக்கும் வசதி
    X

    ரெயிலில் பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுக்கும் வசதி

    பணம் செலுத்தாமல் ரெயில் டிக்கெட்டுகளை எடுத்து விட்டு 14 நாட்களுக்கு பிறகு பணம் செலுத்தும் புதிய வசதியை ரெயில்வே நிர்வாகம் விரைவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    விரைவு ரெயில்களில் பயணம் செய்பவர்கள் பணம் செலுத்தாமல் டிக்கெட்டுகள் எடுக்கும் புதிய வசதியை ரெயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.

    இது தொடர்பாக ரெயில்வே செய்தி தொடர்பாளர் சந்தீப் தத்தா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பணம் செலுத்தாமல் ரெயில் டிக்கெட்டுகளை எடுத்து விட்டு 14 நாட்களுக்கு பிறகு பணம் செலுத்தும் புதிய வசதியை ரெயில்வே நிர்வாகம் விரைவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    இந்திய ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ இணைய தளமான ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் போது மட்டுமே இந்த வசதியை பயணிகளால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இணைய தளத்தில் இந்த வசதி விருப்ப தேர்வாக இருக்கும்.

    இதைப் பயன்படுத்தி அனைத்து விரைவு ரெயில்களிலும் பயணம் செய்வதற்கு 5 நாளுக்கு முன்னர் பணம் செலுத்தாமல் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

    பின்னர் அடுத்த 14 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும். இந்த டிக்கெட்டுகளுக்கு 3.5 சதவீதம் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

    இதனை பயன்படுத்த விரும்பும் பயணிகள் தங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், பான் எண், ஆதார் எண் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    இந்த விவரங்களை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு செல்போனுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (ஓ.டி.பி.) வரும். அதனை பயன்படுத்தி பின்னர் பயணிகள் டிக்கெட் எடுத்து கொள்ளலாம். இந்த புதிய சேவைக்கு “Buy ticket now and pay Later” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×