search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தியது நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி.
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தியது நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியை 3-1 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2017 #ChennaiyinFC #NortheastUnitedFC

    கவுஹாத்தி:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கவுஹாத்தியில் இன்று இரவு 8:00 மணிக்கு தொடங்கிய 51-வது லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. - சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் கவுஹாத்தி அணியின் சைமின்லென் டோன்கெல் முதல் கோல் அடித்தார். ஆனால் சென்னை அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தின் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யூனைடெட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
     


    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 46-வது நிமிடம் கவுஹாத்தி அணியின் சைமின்லென் டோன்கெல் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் கவுஹாத்தி அணி 2-1 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து 68-வது நிமிடம் டோன்கெல் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். சென்னை அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அனிரூத் தபா 79-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் நார்த்ஈஸ்ட் யூனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இதன்மூலம் சென்னை அணி 20 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நார்த்ஈஸ்ட் யூனைடெட் அணி 10 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கின்றன. இன்று நடைபெறும் லீக் போட்டிகளில் எப்.சி. புனே சிட்டி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #ISL2017 #NortheastUnitedFC #ChennaiyinFC
    Next Story
    ×