search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சுவிட்டோலினா, முல்லர் 3-வது சுற்றுக்கு தகுதி
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சுவிட்டோலினா, முல்லர் 3-வது சுற்றுக்கு தகுதி

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் எலினா சுவிட்டோலினா மற்றும் ஜைல்ஸ் முல்லர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். #AUSOpen #AustralianOpen #ElinaSvitolina
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 4-ம் நிலை வீராங்கனையான எலினா சுவிட்டோலினா (உக்ரைன்) 2-வது சுற்றில் செக் குடியரசுவை சேர்ந்த கேத்ரினாவை எதிர்கொண்டார். இதில் சுவிட்டோலினா 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் மர்தா கோஸ்பூர் (உக்ரைன்) 6-3, 7-5 என்ற கணக்கில் ஏலவியாவை (அமெரிக்கா) வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் கேத்ரினா (உக்ரைன்) வெற்றி பெற்றார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 23-ம் நிலை வீரரான ஜைல்ஸ் முல்லர் (லக்சம்பர்க்) ஜாசிரியை (துனிசியா) எதிர் கொண்டார். இதில் முல்லர் 7-5, 6-4, 6-7,(5-7), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். #AUSOpen #AustralianOpen #ElinaSvitolina
    Next Story
    ×