என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
U19 உலகக்கோப்பை: இங்கிலாந்து, வங்காள தேச அணிகள் வெற்றி
Byமாலை மலர்15 Jan 2018 3:10 PM GMT (Updated: 15 Jan 2018 3:10 PM GMT)
U19 உலகக்கோப்பை இன்றைய லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காள தேச அணிகள் வெற்றி பெற்றன. #U19CWC #ENGU19 #BANU19
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு லீக் ஆட்டத்தில் சி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து - நிமிபியா அணிகள் மோதின.
டாஸ் வென்ற நமிபியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் தாக்குப்பிடித்த நமிபியா 9 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ப்ரூக் 59 ரன்களும், ஜேக்ஸ் 73 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மற்றொரு லீக் ஆட்டத்தில் இதே பிரிவில் இடம்பிடித்துள்ள வங்காள தேசம் - கனடா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்தது. தாவித் ஹ்ரிடாய் 122 ரன்கள் அடித்தார். அபிஃப் ஹொசைன் அரைசதம் அடித்தார்.
பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கனடா அணி களம் இறங்கியது. அந்த அணி 49.3 ஓவரில் 198 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிஃப் ஹொசைன் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #U19CWC #ENGU19 #BANU19

Next Story
×