search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் பேட்டிங்கால் செஞ்சூரியனில் கடைசி ஐந்து போட்டியில் நடந்தது என்ன?- ஓர் அலசல்
    X

    முதல் பேட்டிங்கால் செஞ்சூரியனில் கடைசி ஐந்து போட்டியில் நடந்தது என்ன?- ஓர் அலசல்

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது போட்டி நடைபெறும் செஞ்சூரியன் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. #SAvIND #CenturionTest
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானம் தென்ஆப்பிரிக்காவிற்கு மிகவும் ராசியான மைதானம் ஆகும். இங்கு இரண்டு முறை மட்டுமே தென்ஆப்பிரிக்கா தோல்வியை சந்தித்துள்ளது.

    கடைசி ஐந்து போட்டிகளில் நடந்த முடிவை பார்த்தால் இந்தியாவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கும். ஆம். கடைசி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி அதிக ரன்கள் குவித்ததோடு மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றுள்ளது.

    கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 214 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் சேஸிங் செய்த நியூசிலாந்து 195 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 204 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி 4 நாட்களில் முடிவடைந்தது.

    2016 ஜனவரி மாதம் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. முதல் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 475 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 342 ரன்கள் சேர்த்தது. 2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 101 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 552 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 201 ரன்களும், 2-வது இன்னிங்சில் 131 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் 4 நாட்களில் முடிவடைந்தது.



    2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 397 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சில் 206 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா. அதன்பின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 200 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்காவின் 2-வது தோல்வி இதுவாகும். இந்த போட்டி 4 நாட்களல் முடிவடைந்தது. இதற்கு முன் இங்கிலாந்திடம் 2000-த்தில் தோல்வியடைந்துள்ளது. இதைத் தவிர தென்ஆப்பிரிக்கா செஞ்சூரியனில் தோல்வியை சந்தித்தது கிடையாது.



    2013-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்கா 409 ரன்கள் குவித்தது. பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 156 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 235 ரன்களும் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி 3 நாட்களில் முடிவுக்கு வந்தது.

    தற்போதும் தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். #SAvIND #CenturionTest
    Next Story
    ×