search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய அணிக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த ஆஸ்திரேலிய வீரர்
    X

    தேசிய அணிக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த ஆஸ்திரேலிய வீரர்

    ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரை புறக்கணித்து கவுண்டி போட்டியில் விளையாட இருக்கிறார். #IPL #IPLAuction
    ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ். தற்போது நடைபெற்று ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறார். பெர்த்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 181 ரன்கள் குவித்தார்.

    ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ள மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் வரும் ஐபிஎல் டி20 லீக் தொடர் சர்வதேச அளவில் பிரமாண்டமான தொடராக விளங்கி வருகிறார். இதில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இதனால் சொந்த நாட்டிற்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதி்ல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



    கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர்செயின்ட் அணியில் இடம்பிடித்திருந்தவர் மிட்செல் மார்ஷ். இவரை புனே அணி 4.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது.

    2018 ஐபில் சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 27 மற்றும் 28-ந்தேதிகளில் நடக்கிறது. இதில் மிட்செல் மார்ஷ் கலந்து கொண்டால் நிச்சயமாக 5 கோடி ரூபாய்க்கு போல் ஏலம் போகலாம்.

    ஆனால், பணத்தைப் பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக விளையாடும் நோக்கில் ஐபிஎல் தொடரை புறக்கணித்து விட்டு இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாட இருக்கிறார்.

    இதுகுறித்து மிட்செல் மார்ஷ் கூறுகையில் ‘‘வருவாயை பொறுத்த நிலையில் இது ஒரு பெரிய முடிவுதான், ஆனால் என்னுடைய முதன்மையான குறிக்கோள் ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
    Next Story
    ×