என் மலர்
செய்திகள்

டெஸ்டில் அதிக ரன்கள்: ஜெயவர்தனே, சந்தர்பால், லாராவை முந்தினார் அலஸ்டைர் குக்
மெல்போர்ன் டெஸ்டில் 244 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜெயவர்தனே, சந்தர்பால், லாராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் குக்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 327 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இன்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 491 ரன்கள் குவித்துள்ளது. அலஸ்டைர் குக் 244 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.
சர்வதேச போட்டியில் 32-வது சதத்தை பூர்த்தி செய்த குக், 5-வது முறையாக இரட்டை சதம் அடித்துள்ளார். இந்த 244 ரன்கள் மூலம் டெஸ்டில் அதிக ரன்கள் குவித்திருந்தவர்கள் பட்டியலில் லாரா, சந்தர்பால், ஜெயவர்தனே ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

மெல்போர்ன் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் 11712 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்தார். 103 ரன்னை எடுக்கும்போது ஜெயவர்தனே எடுத்த 11814 ரன்னைக் கடந்தார். 167 ரன்கள் எடுத்திருக்கும்போது சந்தர்பாலை முந்தினார். 241 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரைன் லாரா எடுத்திருந்த 11953 ரன்களை தாண்டினார்.
தற்போது 11956 ரன்களுடன் 6-வது இடத்தில் உள்ளார். சங்ககரா 12400 ரன்களுடன் 5-வது இடத்தில் உள்ளார். டிராவிட் 13288 ரன்களுடன் 4-வது இடத்திலும், கல்லீஸ் 13289 ரன்களுடன் 3-வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 13378 ரன்களுடன் 2-வது இடத்திலும், சச்சின் தெண்டுல்கர் 15921 ரன்களுடன் முதல் இடத்திலும் உள்ளனர்.

Next Story