என் மலர்
செய்திகள்

2017-ல் அதிக கோல்: மெஸ்சியை துரத்துகிறார் டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன்
2017-ம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மெஸ்சியை டோட்டன்காம் வீரர் ஹாரி கேன் துரத்துகிறார்.
கால்பந்து விளையாட்டில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். 2017-ம் ஆண்டு மட்டும் மெஸ்சி பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக இதுவரை 54 கோல்கள் அடித்துள்ளார். நேற்று நடைபெற்ற எல் கிளாசிகோவில் அடித்த ஒரு கோலும் இதில் அடங்கும்.
இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் நேற்று டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணி புர்ன்லே அணியை எதிர்த்து விளையாடியது. இதில் டோட்டன்ஹாம் அணி 3-0 என வெற்றி பெற்றது. இந்த மூன்று கோல்களையும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன்தான் அடித்தார்.

இந்த வருடத்தில் ஹாரி கேனின் 7-வது ஹாட்ரிட் கோல் இதுவாகும். மேலும் நேற்று அடித்த மூன்று கோல்கள் மூலம் 53 கோல்கள் அடித்துள்ளார். இன்னும் ஒரு கோல் அடித்தால் மெஸ்சியின் கோல் எண்ணிக்கையை சமன் செய்து விடுவார். டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணிக்கு இந்த வருடத்தில் வரும் 26-ந்தேதி போட்டி மட்டுமே உள்ளது. அதன்பிறகு போட்டியில்லை. இதனால் அந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்தால் மெஸ்சி சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ, ராபர்ட் லெவான்டோஸ்கி, எடின்சன் கவானி ஆகியோர் 53 கோல்கள் அடித்துள்ளனர்.

Next Story