search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் ஜார்ஜினா கார்சியா
    X

    மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் ஜார்ஜினா கார்சியா

    புனேவில் நடைபெற்ற ஐ.டி.எப். மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பிரிட்டனின் கேட்டி டியூனை வீழ்த்தி ஸ்பெயினின் ஜார்ஜினா கார்சியா சாம்பியன் பட்டம் வென்றார்.

    புனே:

    சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐ.டி.எப்.) சார்பில் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2001-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் புனே நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. 

    இதில், 2-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் ஜார்ஜினா கார்சியா, நான்காம் நிலை வீராங்கனையான பிரட்டனின் கேட்டி டியூனை எதிர்கொண்டார். சுமார் 1 மணி நேரம் 40 நிமிடம் நீடித்த இந்த போட்டியில், ஜார்ஜினா வெற்றி பெற்றார்.



    முதல் செட்டை 6-4 என்ற செட் கணக்கில் ஜார்ஜினா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினர். இறுதியில் ஜார்ஜினா, அந்த சுற்றையும் 7-5 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஜார்ஜினா, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

    இது ஆசியாவில் ஜார்ஜினா வெல்லும் முதல் சாம்பியன் பட்டமாகும். சாம்பியன் பட்டம் வென்ற ஜார்ஜினாவுக்கு 50 தரப்புள்ளிகளும், இரண்டாம் இடம் பிடித்த கேட்டி டியூனுக்கு 30 தரப்புள்ளுகளும் வழங்கப்பட்டது.
    Next Story
    ×