search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி.யை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி.யை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி.யை 1-0 என வீழ்த்தி வெற்றி பெற்றது.

    கொச்சி:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சியில் இன்று இரவு 8 மணிக்கு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர், நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா, இரண்டு தோல்வியுடன் ஏழாவது இடத்தில் இருந்தது. கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் 3 தோல்வி, ஒரு டிராவுடன் எட்டாவது இடத்தில் இருந்தது.


    கோலடித்த வினீத் (கேரளா)

    விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் கேரளாவின் வினீத் கோல் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்காததால் இந்த கோலே வெற்றி கோலாக அமைந்தது. இதனால் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற கேரளா அணி 6 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது.

    அடுத்ததாக 16-ம் தேதி டெல்லியில் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி டைனமோஸ் எப்.சி - எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.

    Next Story
    ×