search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெர்த் டெஸ்ட்: 114 வருட சாதனையை முறியடித்த தாவித் மலன் - பேர்ஸ்டோவ் ஜோடி
    X

    பெர்த் டெஸ்ட்: 114 வருட சாதனையை முறியடித்த தாவித் மலன் - பேர்ஸ்டோவ் ஜோடி

    ஆஷஸ் தொடரின் பெர்த்தில் நடைபெற்று வரும் டெஸ்டில் தாவித் மலன் - பேர்ஸ்டோவ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 237 ரன்கள் குவித்து 114 வருட சாதனையை முறியடித்துள்ளது.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டெஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் (7), ஸ்டோன்மேன் (56), வின்ஸ் (25), ஜோ ரூட் (20) விரைவில் அவுட் ஆனார்கள். இதனால் இங்கிலாந்து 131 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்கு தாவித் மலன் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. தாவித் மலன் சதமும், பேர்ஸ்டோவ் அரைசதமும் அடித்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்திருந்தது. தாவித் மலன் 110 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 75 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 2-வது ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பேர்ஸ்டோவ் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய தாவித் மலன் ஆஸ்திரேலியா 368 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 140 ரன்களில் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்தது.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 5-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளனர். இதற்கு முன் டிப் பாஸ்டர் - லென் பிராண்ட் 114 வருடத்திற்கு முன் 192 ரன்கள் சேர்த்ததே சாதனையை இருந்தது. தற்போது தாவித் மலன் - பேர்ஸ்டோவ் ஜோடி இந்த சாதனையை முறியடித்துள்ளது. சதம் அடித்த பேர்ஸ்டோவ் 119 ரன்னில் அவுட் ஆனார்.
    Next Story
    ×