search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெர்த் டெஸ்ட்: மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 91/2; குக் ஏமாற்றம்
    X

    பெர்த் டெஸ்ட்: மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 91/2; குக் ஏமாற்றம்

    ஆஷஸ் தொடரின் பெர்த் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. குக் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.


    இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஸ்டோன்மேன்

    இந்நிலையில் 3-வது போட்டி உலகின் அதிகவேக ஆடுகளம் என்று அழைக்கப்படும் பெர்த் வாகா (WACA) மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஹேண்ட்ஸ்காம்ப் நீக்கப்பட்டு மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார்.



    இங்கிலாந்து அணியின் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குக்கிற்கு இது 150-வது டெஸ்ட் போட்டியாகும். முதல் இரண்டு போட்டியில் சோபிக்காத குக், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பா்க்கப்பட்டது. ஆனால், 7 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி ஏமாற்றமடைந்தார். அடுத்து வின்ஸ் களம் இறங்கினார்.


    பவுன்சர் பந்து தாக்காமல் இருக்கு குனிந்து பந்தை லீவ் செய்யும் ஸ்டோன்மேன்

    ஸ்டோன்மேன் - வின்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக ஸ்டோன்மேன் அழகான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் மதிண உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. வின்ஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஸ்டோன்மேன் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 27 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோன்மேன் 48 ரன்னுடனும், ஜோ ரூட் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×