search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடக்க வீரராகத்தான் களம் இறக்குவோம்: நிர்வாகத்தின் முடிவால் வஞ்சிக்கப்படும் ரகானே
    X

    தொடக்க வீரராகத்தான் களம் இறக்குவோம்: நிர்வாகத்தின் முடிவால் வஞ்சிக்கப்படும் ரகானே

    தொடக்க வீரராகத்தான் களம் இறக்குவோம் என பிசிசிஐ நிர்வாகம் உறுதியாக இருப்பதால், ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்காமல் ரகானே வஞ்சிக்கப்படுகிறார்.
    இந்திய அணியின் முன்னணி் பேட்ஸ்மேன்களில் ஒருவர் அஜிங்யா ரகானே. 29 வயதாகும் ரகானே இதுவரை இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் 2826 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.15. 9 சதம், 12 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    84 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதம், 23 அரைசதங்களுடன் 2822 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 35.27. 20 டி20 போட்டிகளில் 375 ரன்கள் சேர்த்துள்ளார். 1 அரைசதத்துடன் 20.83 சராசரி வைத்துள்ளார்.

    2011-ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்த ரகானே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மிகவும் சிறப்பாக விளையாடக்கூடியவர். தற்போதைய அணியில் வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடுவதற்கு இவர் மட்டுமே உள்ளார். இந்திய மண்ணில் அவரின் சராசரியை விட வெளிநாட்டு மண்ணில் அதிகம்.



    டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக விளங்கும் ரகானே தொடக்க வீரர்கள், புஜாரா, கோலி களம் இறங்கிய பின்னர் 5-வது வீரராக களம் இறங்குகிறார். ஆனால் ஒருநாள் போட்டியில் அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்படவில்லை.

    டோனி காலத்தில் இருந்தே ரகானேவிற்கு தொடக்க வீரர்கள் வரிசையில் மட்டும்தான் இடம் என்ற எழுதப்படாத சட்டம் இருந்து வருகிறது. இது விராட் கோலி கேப்டனிலும் தொடர்கிறது.

    தற்போது இந்திய அணியில் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் களம் இறங்காவிடில் ரகானேவிற்கு இடம் கிடைக்கிறது. அப்படி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இடம்கிடைக்கும்போது அசத்தினார். அந்த தொடரில் தொடர்நாயகன் விருது கிடைத்தது. ஆனால் இலங்கை தொடரில் இடம்கிடைக்கவில்லை.

    இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணியல் சில பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதும் கூட ரகானேவை மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கி பரிசோதனை செய்யப்படவில்லை.



    தவான் மற்றும் ரோகித் சர்மா பிளாட் ட்ராக்கில் (Flat Track) மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார்கள். இதற்கு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி மற்றும் நேற்று நடந்த தரம்சாலா போட்டியை உதாரமாண கூறலாம்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலில் கொடுக்கப்பட்ட அனைத்தும் பிளாட் ட்ராக். இதில் தவான், ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் சற்று பந்து வீச்சுக்க சாதகமான ஆடுகளம் கொடுக்கப்பட்டது. இதில் இருவரும் சொதப்பினார்கள்.

    அதேபோல்தான் நேற்றைய தரம்சாலா ஆடுகளம். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இருவரும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். தவான் டக்அவுட்டிலும், ரோகித் சர்மா 2 ரன்னிலும் அவுட்டானார்.

    மேலும், விராட் கோலி இல்லாத நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். கோலி இல்லாத நிலையில்கூட ரகானே களம் இறக்கப்படவில்லை.

    நேற்றைய ஆடுகளத்தில் ரகானே களம் இறங்கியிருந்தால் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியிருப்பார் என்ற பார்வை வைக்கப்படுகிறது. இதுகுறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ‘‘ரகானே தொடக்க வீரராகத்தான் பார்க்கப்படுகிறார். இது நிர்வாகத்தின் முடிவு’’ என்று கூறினார்.

    பரிசோதனை முறையில் பல வீரர்களை மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கும்போது, ரகானேவிற்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால், நிர்வாகத்தின் முடிவால் ரகானே வஞ்சிக்கப்படுகிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

    இதையும் மீறி ரகானே மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு
    Next Story
    ×