search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா தொடரில் இடம் கிடைக்குமா? என்பது குறித்து யோசிக்கவில்லை: ஜடேஜா
    X

    தென்ஆப்பிரிக்கா தொடரில் இடம் கிடைக்குமா? என்பது குறித்து யோசிக்கவில்லை: ஜடேஜா

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனக்கு ஆடும் லெவன் அணியில் இடம்கிடைக்குமா? என்பது குறித்து யோசிக்கவில்லை என ஜடேஜா கூறியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடிய பின்னர் தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

    இந்திய மண்ணில் நீண்ட நாட்களாக விளையாடிய பின்னர், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பெரிய சவாலை சந்திக்க இருக்கிறது. இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது.

    இந்த போட்டிக்கு முன் பேட்டியளித்த விராட் கோலி, ‘‘தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. எதிரணி பேட்ஸ்மேன்களை பொறுத்து ஒருவருக்கு இடம் கிடைக்கும்’’ என்றார்.

    இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இந்தியா ஒரு சுழற்பந்து வீச்சாளருடன்தான் களம் இறங்கும் என்பது தெளிவாகிவிட்டது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடரில் இடம் கிடைக்குமா? என்பது குறித்து தான் யோசிக்கவில்லை என ஜடேஜா கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் ‘‘நான் கேப்டனாக இருந்தால், அஸ்வின் அல்லது நான் ஆகியோரில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்கிறீர்கள். நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இதுதானா?. சிரி்த்துக்கொண்டே, நான் கேப்டனாக இருந்தால், பந்தை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன். ஒரு முனையில் பந்து வீசிக் கொண்டே இருப்பேன்.

    தென்ஆப்பிரிக்கா தொடரில் இடம்பிடிப்பது அணியின் பேலன்ஸ்-ஐ சார்ந்தது. அப்போது அணிக்கு எந்த வீரர்கள் தேவையோ, அவர்களை தேர்வு செய்வார்கள். வெளிநாட்டு தொடரில் எத்தனை இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடுகிறார்கள். எத்தனை வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடுகிறார்கள் என்பதை மதிப்பீடு செய்து, அதற்கேற்றபடி வீரர்களை தேர்வு செய்யப்படுவார்கள்.



    எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். என்னுடைய கட்டுப்பாட்டில் ஏதும் இல்லாததால், அதைப்பற்றி யோசனை செய்ய ஒன்றுமில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால், சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன்.

    கடந்த தொடரின்போது முதல் டெஸ்டில் அஸ்வின் விளையாடினார். அதன்பின் 2-வது டெஸ்டில் நான் இடம்பிடித்தேன். அணியின் காம்பினேசனை சார்ந்துதான் வீரர்கள் தேர்வு அமையும்’’ என்றார்.
    Next Story
    ×