search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் தோல்வி
    X

    ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் தோல்வி

    பெங்களூரு ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் தோல்வி அடைந்தார்.
    பெங்களூரு:

    பெங்களூரு ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்றில் இந்திய வீரர் ராம்குமார், இங்கிலாந்தின் ஜாய் கிளார்க்குடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 7-6 (3), 2-6, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

    மற்றொரு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6-2, 7-6 (0) என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டினசை வெளியேற்றி கால்இறுதியை எட்டினார். சுமித் நாகல், பிரஜ்னேஸ் குணேஸ்வரன் ஆகிய இளம் இந்திய வீரர்களும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.
    Next Story
    ×