search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரிக்கு டிச.4-ந்தேதி திருமணம்
    X

    இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரிக்கு டிச.4-ந்தேதி திருமணம்

    இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, தனது நீண்ட நாள் தோழியான சோனம் பட்டாச் சாரியாவை டிசம்பர் 4-ம் தேதி மணக்கிறார்.
    இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. 33 வயதான அவர் தற்போது நடந்து வரும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து தொடரில் பெங்களூரு எப்.சி. அணியில் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் சுனில் சேத்ரி திருமணம் வருகிற டிசம்பர் 4-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. தனது நீண்ட நாள் தோழியான சோனம் பட்டாச் சாரியாவை மணக்கிறார்.

    இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று குர்கானில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 24-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. சோனம் ஸ்காட்லாந்து நாட்டில் பட்டப்படிப்பு படித்தவர்.
    Next Story
    ×