search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்ச் பிக்சிங்கிற்கு 10 ஆண்டு ஜெயில்: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய அனுராக் தாகூர் முடிவு
    X

    மேட்ச் பிக்சிங்கிற்கு 10 ஆண்டு ஜெயில்: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய அனுராக் தாகூர் முடிவு

    மேட்ச் பிக்சிங், ஊக்க மருந்து பயன்படுத்துதல் போன்றவற்றை விளையாட்டுத்துறையில் கட்டுப்படுத்த பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்ய அனுராக் தாகூர் முடிவு செய்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் அனுராக் தாகூர். இமாச்சல பிரதேச மாநில எம்.பி.யான இவர் பிசிசிஐ-யின் முக்கிய நபராக விளங்கினார். லோதா தலைமையிலான பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் நிறைவேற்ற உத்தரவிட்ட விவகாரத்தில் தனது பிசிசிஐ தலைவர் பதவியை இழந்தார்.

    விளையாட்டில் மேட்ச் பிக்சிங், ஊக்கமருந்து பயன்படுத்துதல், வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை என ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த விவகாரம் சரியான முறையில் கையாழுவதில்லை. இதனை முறைப்படுத்துவதற்காக விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். இது ஒரு சிவில் கோர்ட் போன்று செயல்படும். இதற்கான தனிநபர் மசோதா ஒன்றை வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் முன்மொழிய அனுராக் தாகூர் முடிவு செய்துள்ளார்.

    ‘‘மேட்ச் பிக்சிங்கில் ஒரு வீரர் ஈடுபட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ஐந்து மடங்கு அபாரத்தொகை விதிக்கப்படும்’’ என்பது இந்த மசோதாவின் முக்கியம்சமாகும்.

    இந்த அமைப்பு 6 பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் நான்கு பேர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு நியமிக்கப்படுவார்கள் எனவும் அந்த மசோதாவில் இடம்பெற இருக்கிறது.
    Next Story
    ×