search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் போட்டியில் 57 சிக்சர், 27 பவுண்டரியுடன் 490 ரன்கள் எடுத்து சாதனை: தென் ஆப்ரிக்கா வீரருக்கு குவியும் பாராட்டு
    X

    ஒருநாள் போட்டியில் 57 சிக்சர், 27 பவுண்டரியுடன் 490 ரன்கள் எடுத்து சாதனை: தென் ஆப்ரிக்கா வீரருக்கு குவியும் பாராட்டு

    தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
    தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

    தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள நார்த்வெஸ்ட் யுனிவர்சிடி புக்கே அணிக்கும், போட்ச் டார்ப் அணிக்கும் இடையே நேற்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய நார்த்வெஸ்ட் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

    குறிப்பாக, அந்த அணியை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். தொடக்கத்தில் இருந்தே பந்துகளை மைதானம் முழுக்க பறக்கவிட்டார்.

    இறுதியில், 151 பந்துகளில் 57 சிக்சர்கள் மற்றும் 27 பவுண்டரிகளுடன் 490 ரன்கள் எடுத்தார். அவருடன் விளையாடிய மற்றொரு வீரர் ருவான் ஹாஸ்புருக் 54 பந்துகளில் 6 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 677 ரன்கள் எடுத்தது.



    இதையடுத்து, 678 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய போட்ச் டார்ப் அணியினரால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் புக்கே அணி 387 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    புக்கே அணி சார்பில் பந்து வீசிய ஷேன் டேட்ஸ்வெல் சிறப்பாக பந்து வீசினார். 7 ஓவர் பந்து வீசியதில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடிய ஷேன் டேட்ஸ்வெல் நேற்று தனது 20-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்த ஷேன் டேட்ஸ்வெல்லுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×