search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஷ்மண், அகர்கர் தேர்வாளர்கள் அல்ல: டோனி குறித்த கருத்துக்கு கவாஸ்கர் பதில்
    X

    லஷ்மண், அகர்கர் தேர்வாளர்கள் அல்ல: டோனி குறித்த கருத்துக்கு கவாஸ்கர் பதில்

    டி20 கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்களுக்கு டோனி வழிவிட வேண்டும் என்று லஷ்மண் மற்றும் அகர்கர் ஆகியோர் கூறியதற்கு கவாஸ்கர பதில் அளித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்று புகழ்பெற்ற மகேந்திர சிங் டோனி, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.

    இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை டோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 197 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒருபக்கம் விராட் கோலி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது, மறுமுனையில் டோனி சற்று தடுமாறினார்.



    இந்த போட்டிக்குப்பிறகு இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் லஷ்மண் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அகர்கர் ஆகியோர் டோனி இளம் வீரர்களுக்கு டி20 கிரிக்கெட் போட்டிக்கு வழியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதற்கு கவாஸ்கர் பதிலளித்துள்ளார். லஷ்மண் மற்றும் அகர்கர் கூறிய கருத்துக்கு கவாஸ்கர் பதில் கூறுகையில்  ‘‘லஷ்மண் மற்றும் அகர்கர் ஆகியோருக்கு தங்கள் கருத்துக்களை கூற உரிமை உண்டு. இது அவர்களுடைய பார்வை. தேர்வாளர்கள் அல்ல’’ என்றார்.

    மேலும், ‘‘ஹர்திக் பாண்டியா இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக செயல்படும் திறமையை பெற்றிருக்கவில்லை. அவர் மீதான எதிர்பார்ப்பு அவரை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு வீரர் அதிகப்படியான ரன்கள் குவிக்காவிடிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததால் உதவிகரமாக இருக்கும்.



    இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நாம் எதிர்பா்க்கக்கூடாது. ஒரு வீரர் 30 வயதை தாண்டும் பொழுதும் யாராகா இருந்தாலும் அவரது ஆட்டத்தில் தப்பை தேடி கண்டுபிடித்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றார்.
    Next Story
    ×