search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 போட்டிக்கு மழை வழிவிடுமா?
    X

    இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 போட்டிக்கு மழை வழிவிடுமா?

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரை நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டி மழையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் நியூசிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளைமறுதினம் (நவ.7-ந்தேதி) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

    தென்மேற்கு பருவமழைக் காலம் முடிவடைந்து விட்டதால் தற்போது கேரளாவில் மழை சீசன் இல்லை. என்றாலும் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யலாம் என வானிமை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மைதானம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் போட்டி நடப்பது சந்தேகம்தான்.



    இருந்தாலும், மைதானத்தில் தண்ணீர் வடிகால் சிறப்பான வகையில் உள்ளதால், மழை நின்றவுடன் மைதானம் போட்டிக்கு தயாராகிவிடும் என்று மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான தொடரை தீர்மானிக்கக் கூடிய 3-வது போட்டி மழையினால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×