search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்முலா-1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி
    X

    பார்முலா-1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

    பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 33 நிமிடம் 50.991 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார்.
    ஆஸ்டின்:

    பார்முலா-1 கார் பந்தயத்தின் 17-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டி ஆஸ்டினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) 1 மணி 33 நிமிடம் 50.991 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ) 2-வது இடம் பிடித்தார். இன்னும் 3 சுற்று பந்தயங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் லீவிஸ் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    செபாஸ்டியன் வெட்டல் 265 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஹாமில்டன் 4-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை பறிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
    Next Story
    ×