search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து ‘ஏ’க்கு எதிரான போட்டியில் இந்தியா ‘ஏ’ இன்னிங்ஸ் வெற்றி
    X

    நியூசிலாந்து ‘ஏ’க்கு எதிரான போட்டியில் இந்தியா ‘ஏ’ இன்னிங்ஸ் வெற்றி

    நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி, இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியா ‘ஏ’ - நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கடந்த 23-ந்தேதி தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. கரண் ஷர்மா, நதீம் ஆகியோரின் சுழற்பந்து வீச்சில் நியூசிலாந்து ‘ஏ’ அணி 147 ரன்னில் சுருண்டது. இருவரும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷ்ரேயாஸ் அய்யர் (108), சமர்த் (54), ரிஷப் பந்த் (67) ஆகியோரின் சிறப்பான இந்தியா ‘ஏ’ அணி 320 ரன்கள் குவித்தது

    .

    பின்னர் 173 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சைத் தொடங்கியது. இந்த இன்னிங்சிலும் கரண் ஷர்மா, நதீம் சிறப்பாக பந்து வீசினார்கள். இருவரும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த நியூசிலாந்து ‘ஏ’ 2-வது இன்னிங்சில் 142 ரன்னில் சுருண்டது.

    இதனால் இந்தியா ‘ஏ’ அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி 30-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×