search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த இலக்கு தென்ஆப்பிரிக்கா அணிதான்: வங்காளதேச கேப்டன் சொல்கிறார்
    X

    அடுத்த இலக்கு தென்ஆப்பிரிக்கா அணிதான்: வங்காளதேச கேப்டன் சொல்கிறார்

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை வென்ற எங்களின் அடுத்த இலக்கு தென்ஆப்பிரிக்கா என வங்காளதேச கேப்டன் கூறியுள்ளார்.
    வங்காளதேச கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார்கள்.

    தற்போது டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி அதிக கவனம் செலுத்தி வருகிறது. சொந்த மண்ணில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் முதன்முதலாக வெற்றி பெற்று சாதனைப் படைத்தது. தற்போது வங்காள தேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 28-ந்தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அடுத்த இலக்கு தென்ஆப்பிரிக்காதான் என வங்காள தேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறியுள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா தொடர் குறித்து முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில் ‘‘வங்காள தேசம் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எங்களுடைய முதல் இலக்கு, சிறப்பான ஆட்டத்துடன் செல்ல வேண்டும் என்பதுதான்.

    எங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும்போது நாங்கள் அதிக உறுதியோடு இருந்தோம். அதே உறுதியோடு தென்ஆப்பிரிக்கா மண்ணில் விளையாடுவது எளிதானதல்ல. ஆனால், எங்களுடைய அடுத்தக்கட்ட நோக்கம் அதுதான். ஆப்பிரிக்க மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இது எங்களுக்கு சிறந்த வாய்ப்பு.



    சாஹிப் அல் ஹசன் சிறப்பான வீரர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதுதான் வெற்றிக்கான முக்கிய விஷயம். ஆனால், தமீம் இக்பால், மெஹ்முதுல்லா, சபீர் ரஹ்மான், மொமினுல் ஹக்யூ போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×