search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுகுழு
    X

    இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுகுழு

    இலங்கை அணியின் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரேமி லாப்ரூய் நியமிக்கப்பட்டுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக சனத் ஜெயசூர்யா தலைமையிலான தேர்வு குழுவினர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் இலங்கை அணியின் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரேமி லாப்ரூய் நியமிக்கப்பட்டுள்ளார். 53 வயதான லாப்ரூய் இலங்கை அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 44 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    5 பேர் கொண்ட தேர்வு கமிட்டியில் காமினி விக்ரமசிங்கே, ஜெர்ல் உடெர்ஸ், சஜித் பெர்னாண்டோ, அசன்கா குருசிங்கா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இலங்கை அணி விரைவில் பாகிஸ்தானுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இலங்கை அணியை புதிய தேர்வு குழு தேர்ந்தெடுக்கும்.
    Next Story
    ×