search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பும்ராவை போல் தோற்றமளிக்கும் பாகிஸ்தான் ரசிகர்
    X

    பும்ராவை போல் தோற்றமளிக்கும் பாகிஸ்தான் ரசிகர்

    பும்ராவை போல் தோற்றமுடைய பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் உலக லெவன் அணிக்கெதிராக நடைபெற்ற டி20 போட்டியை பார்க்க வந்தபோது போட்டோவில் கிளிக் ஆகியுள்ளார்.
    பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் நடைபெற்றது. 2009-ம் ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் தற்போதுதான் சர்வதேச போட்டிகள் நடைபெற்றன.

    இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லாகூர் மைதானத்தில் திரண்டனர். இதில் ஒரேயொரு ரசிகர் மட்டும் அனைவரது கண்ணிலும் பட்டார். அதற்குக் காரணம் அந்த ரசிகர் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான பும்ரா போன்று தோற்றமளித்தார்.



    அந்த ரசிகரை படமெடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ‘‘பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க பாகிஸ்தான் வந்ததற்கு பும்ராவிற்கு நன்றி. பெரிய தொடர்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவு’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இதன்மூலம் அந்த ரசிகர் பாகிஸ்தானில் பிரபலம் அடைந்துள்ளார்.
    Next Story
    ×