search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 போட்டி: 20 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி
    X

    இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 போட்டி: 20 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி

    இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையேயான ஒரு டி20 கிரிக்கெட் போட்டி செஸ்டர்-லி-ஸ்டிரிட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

    இதையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரிஸ் கெயிலும், எவின் வெவிஸும் களமிறங்கினர். தொடக்க முதலே இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 77 ஆக இருந்தபொழுது கிரிஸ் கெயில் 40 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதில் 3 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். அவரைத்தொடர்ந்து மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்கினார்.



    சிறப்பாக விளையாடிய லெவிஸ் அரைசதம் அடித்தார். அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த வீரர்களில் ரோவ்மேன் பவல் மட்டும் சற்று நிலைத்துநின்று விளையாடி 28 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் குவித்தது. இங்கிலாந்தின் லியாம் பிளங்கீட், அடில் ரசீத் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

    அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து அலேக்ஸ் ஹேல்ஸுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 64 ஆக இருக்கும்பொழுது ஹேல்ஸ் 43 ரன்களில் போல்டானார். அடுத்து களமிறங்கிய இயான் மார்கன் 2 ரன்னில் அவுட் ஆனார். ஜோ ரூட் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 30 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 27 ரன்களிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேற்கிந்திய தீவுகளின் கெஸ்ரிக் வில்லியம்ஸ், கார்லோஸ் பிரத்வெயிட் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளில் சுனில் நரேன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர்  வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×