search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேகப்பந்து வீச்சாளரான ஜூனியர் சச்சினுக்கு மும்பை U-19 அணியில் இடம்
    X

    வேகப்பந்து வீச்சாளரான ஜூனியர் சச்சினுக்கு மும்பை U-19 அணியில் இடம்

    வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் சச்சின் தெண்டுல்கர் 19 வயதிற்குட்பட்டோருக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்ற வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்று பெயர் பெற்றவர்.

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கேற்ப சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூனும் கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். சச்சின் பேட்டிங்கில் சிறந்து விளங்கியவர். அர்ஜூன் இடது கை வேகப்பந்து வீச்சுடன் பேட்டிங் செய்யக்கூடியவர்.



    அர்ஜூன் தற்போது 19 வயதிற்குட்பட்டோருக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார். மறைந்த ஸ்ரீ ஜே.ஒய். லெலே நினைவாக நடைபெறும் 5-வது அனைத்திந்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான இன்விடேசனல் ஒருநாள் தொடர் வருகிற 16-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான மும்பை அணியில் 17 வயதாகும் அர்ஜூன் இடம்பிடித்துள்ளார்.



    இந்த தொடரை பிசிசிஐ நடத்தவில்லை என்றாலும், சிறப்பாக செயல்பட்டால் இந்தியாவின் 19 வயதிற்குபட்டோருக்கான இந்திய அணியில் அர்ஜூன் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
    Next Story
    ×