search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொனாக்கோ வீரர் கிலியன் பப்பேவை கடன் வாங்கும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்
    X

    மொனாக்கோ வீரர் கிலியன் பப்பேவை கடன் வாங்கும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்

    நெய்மரை 1600 கோடி ரூபாய்க்கு வாங்கிய பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன், தற்போது மொனாக்கோ நட்சத்திரம் பப்பேவை லோனுக்கு வாங்க இருக்கிறது.
    பிரான்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் முக்கியமான தொடர் லீக்-1. இந்த தொடரில் முன்னணி அணியாக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) விளங்குகிறது. இந்த அணி சுமார் 1600 கோடி ரூபாய் கொடுத்து பார்சிலோனா அணியில் விளையாடிய நெய்மரை வாங்கியது. நெய்மருக்காக பல கோடிகளை செலவழித்துள்ளதால் மற்ற வீரர்களை அந்த அணி ஒப்பந்தம் செய்ய விரும்பாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

    தற்போது நெய்மர், கவானி, டி மரியா, டி சில்வா போன்ற தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தாலும், கடந்த ஆண்டு ‘லீக் 1’ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மொனாக்கோ அணியில் உள்ள நட்சத்திர வீரர் கிலியன் பப்பேவை குறிவைத்துள்ளது.

    ஏற்கனவே, மான்செஸ்டர் யுனைடெட் உள்பட பல்வேறு அணிகள் பப்பேவை வாங்க போட்டியிட்டன. அப்போது மொனாக்கோ பப்பேவை கொடுக்க மறுத்துவிட்டது. தங்களுக்கு அந்த எண்ணம் இல்லை என்றும் அறிவித்தது.



    இந்நிலையில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) பப்பேவை வாங்க முன்வந்தது. பப்பேவை வாங்க வேண்டுமென்றால் எப்படியும் 100 மில்லியன் யூரோவிற்கு மேல் செலவழிக்க வேண்டும். நெய்மரை வாங்கியதில் ஏற்பட்ட பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் பி.எஸ்.ஜி. அணி பப்பேவை லோனுக்கு வாங்க இருக்கிறது. 2017-18 சீசன் முடிந்த பின்னர், நீண்ட காலத்திற்கு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. பப்பேவை லோனுக்கு வாங்க இருப்பதால், அவருக்குப் பதிலாக லூகாஸ் மவுராவை மொராக்கோ அணிக்கு கொடுக்க பி.எஸ்.ஜி. முன் வந்துள்ளது.

    Next Story
    ×