search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி டென்னிஸ்: சானியா - ஷூவாய் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    சின்சினாட்டி டென்னிஸ்: சானியா - ஷூவாய் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

    சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
    ஒஹியோ:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் பெங் ஷூவாய் ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ்-உக்ரைனின் ஓல்கா சாவ்சக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5 6-4 என்ற நேர்செட்களில் சானியா ஜோடி வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தது.

    காலிறுதியில் ரோமானியாவின் இரினா கேமலியா பெகு-ராலுகா ஜோடியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

    ஆடவர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார், அமெரிக்காவின் டொனால்ட்சனிடம் 4-6 6-2 4-6 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்தார்.

    ரோகன் போபண்ணா-இவான் டோடிக் ஜோடி, இரண்டாம் சுற்றில் ஜூவான் கேபல்-பேபியோ போக்னினி ஜோடியை சந்திக்க உள்ளது.
    Next Story
    ×